என்மனம்
அகிலம் போற்ற அன்பால் இணைந்து
மகிழும் உள்ளம் எனதே !
கற்றது அனைத்தும் சுற்றம் விரும்ப
கற்பிப்பது என்றும் சுகமே !
வாழ்நாள் முழுதும் கற்றால் எனக்கு
ஆழ்மனம் அமைதி பெறுமே!
தாழ்வுற் றுள்ளம் தடுமாறாது என்றும்
தளர்வை நீக்குவது நூலே
கலைகள் அனைத்தும் கருத்தாய்க் கற்று
சமூக மாற்றம் செய்கவே!
வலைபதிவில் வண்ணப் பதிவுகள் செய்து
வளமாய் வாழ்வை அமைப்போமே!
அலையும் மனம் அமைதி பெற்றிட
ஆறுதல் மொழிதல் நலமே!
தலைமைப் பொறுப்பைத் தகைவாய்ப் பெற்று
உயர்ந்த வாழ்வைப் பெறுவோமே!
தாழ்வுற் றுள்ளம் தடுமாறாது என்றும்
தளர்வை நீக்குவது நூலே
கலைகள் அனைத்தும் கருத்தாய்க் கற்று
சமூக மாற்றம் செய்கவே!
வலைபதிவில் வண்ணப் பதிவுகள் செய்து
வளமாய் வாழ்வை அமைப்போமே!
அலையும் மனம் அமைதி பெற்றிட
ஆறுதல் மொழிதல் நலமே!
தலைமைப் பொறுப்பைத் தகைவாய்ப் பெற்று
உயர்ந்த வாழ்வைப் பெறுவோமே!